கொரோனா-அடியோடு விரட்ட 5 மருந்துகள் ..!! - Tamil Crowd (Health Care)

கொரோனா-அடியோடு விரட்ட 5 மருந்துகள் ..!!

 கொரோனா-அடியோடு விரட்ட 5 மருந்துகள் ..!!

கொரோனாவின் தாக்கமும் வீரியமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களிடையே அச்சமும் அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு ஆறுதலாக கடந்த ஆண்டு முதன்முதலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது இருந்த நிலைமை தற்போது முன்னேறியுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

  தமிழகத்தில் புதிய உச்சம் தொடும் கொரோனா..!! 

அதற்கு காரணம் கொடிய கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் தான். இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் மக்களுக்கு பரவலாக போட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தற்போது கொரோனாவின் தாக்கமும், பாதிப்பும் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் ஆறே மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

தற்போது, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் இந்தியாவில் பயன்படுத்தப்ப்டுகின்றன. இருந்தாலும், போதுமான அளவு தடுப்பூசிகள் இல்லாததால், முதலில் 60 வயதுக்கு மேற்பட்டோர், களப் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் என முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி (Vaccine)அனைவருக்கும் போடுவதற்கு போதுமான அளவு இல்லை என பல மாநிலங்கள் தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் இன்று சில இடங்களில் கொரோனா தடுப்பூசியை கள்ளச் சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு, சந்தேகத்திற்கு இடமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்துவிடும் என மத்திய அரசில் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி, நோவாக்ஸ் தடுப்பூசி, ஜைடஸ் காடில்லா தடுப்பூசி, ஸ்புட்னிக் வி தடுப்பூசி, இன்ட்ராநாசல் தடுப்பூசி என 5 தடுப்பூசிகள் அக்டோபர் மாதத்தில் புழக்கத்தில் வந்துவிடும்.

அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர், தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் திறன் ஆகியவை குறித்து மத்திய அரசு கவனத்துடன் ஆராயும். இந்தியா தொடர்ந்து உலகின் தடுப்பு மருந்து மையமாக திகழ்வதற்கும், உலகின் சிறந்த மருந்துகள் இந்தியர்களுக்கு கிடைப்பதற்கும் உறுதி செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியையும் படிங்க…

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் -நாளை முக்கிய ஆலோசனை!

ஆராய்ச்சி, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றில் எதையும் நிறுத்தாமல் மருந்து தயாரிக்கும் பணியை விரைவுபடுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

கொரோனா (Coronavirus) தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் இந்தியாவிற்கு வர வேண்டும் என மத்திய அரசு அழைப்பும் விடுத்துள்ளது. அவர்களுக்கு தேவையான உதவி, நிதி ஆதாரம் மற்றும் பரிசோதனை செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Comment