சிறு சேமிப்பு திட்டங்களின் முக்கியத்துவம் என்ன? - Tamil Crowd (Health Care)

சிறு சேமிப்பு திட்டங்களின் முக்கியத்துவம் என்ன?

 சிறு சேமிப்பு திட்டங்களின் முக்கியத்துவம்  என்ன?

தனிநபர் நிதியில் சிறு சேமிப்பு திட்டங்கள் வகிக்கும் பங்கை தெரிந்து கொள்ள இவற்றின் தன்மையை புரிந்து கொள்வது அவசியம்.சராசரி முதலீட்டாளர்கள் அதிகம் நாடும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அண்மையில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பின் அதற்கான உத்தரவு திரும்ப பெறப்பட்டது. 
இந்தநடவடிக்கை விவாதத்தையும்,சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய வட்டி விகிதம் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது சராசரி முதலீட்டாளர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருந்தாலும், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுவதால், வரும் காலாண்டுகள் இது மாற்றி அமைக்கப்பட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
பலவித பலன்கள் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்பது, இத்திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய உத்தி தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. எனினும் முதலீட்டு உத்தியை தீர்மானிக்கும் முன், தனிநபர் நிதியில் சிறுசேமிப்பு திட்டங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது அவசியம். 
  • பி.பி.எப்., 
  • செல்வமகள் திட்டம், 
  • அஞ்சலக வைப்பு நிதி 
உள்ளிட்டவை சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் வருகின்றன. சீரான சேமிப்பை சாத்தியமாக்குவது இவற்றின் முக்கிய நோக்கம். அரசின் பாதுகாப்பை கொண்ட இந்த திட்டங்கள் பெரும்பாலும் அஞ்சலகங்களாலும், வங்கிகளாலும் அளிக்கப்படுகின்றன.பொதுவாக இந்த திட்டங்கள் குறைந்த இடரை நாடும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றவையாக அமைகின்றன.

அரசு அளிக்கும் பாதுகாப்பு இதற்கு காரணம். அதே நேரத்தில், வழக்கமான முதலீடுகளுடன்ஒப்பிடும் போது இவற்றின் பலன் அதிகமாக இருக்கிறது. மேலும், நீண்ட கால நோக்கிலும் இவை பலன் அளிப்பவையாக இருக்கின்றன. இந்த திட்டங்கள் வரிச்சலுகை பலனை கொண்டிருப்பது இவற்றின் முக்கிய சாதகமாக கருதப்படுகிறது.

பி.பி.எப்.,செல்வ மகள் திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் போன்றவை வரிச்சலுகைக்கு உரியவை.நிதி இலக்குகள்மேலும், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதும் எளிமையானது. அஞ்சலக கிளைகளை அணுகி தேவைக்கேற்ற திட்டத்தில் முதலீடு செய்யலாம். பணத்தை விலக்கி கொள்ளும் செயல்முறையும் எளிதானது.அதே நேரத்தில், வங்கி வைப்பு நிதி முதலீட்டை விட இவை அளிக்கும் பலன் அதிகமானது. தற்போது வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருப்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இந்த செய்தியையும் படிங்க…

1 முதல் 5 -ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் …!!! 

அதோடு, லாக் இன் காலம் கொண்ட திட்டங்களில் முதலீடு செய்தால், தொடர்ந்து தற்போதைய வட்டி விகித பலனை பெறும் வாய்ப்பு உள்ளது.எனவே, சிறு சேமிப்பு திட்ட முதலீட்டை தீர்மானிக்கும் போது ஒட்டுமொத்த நிதி திட்டமிடலை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான முதலீடு தொகுப்பை பெற்றிருக்க வேண்டும்.

அந்த வகையில் முதலீடுதொகுப்பிற்கு சமநிலை அளிக்கும் கடன்சார் முதலீட்டின் கீழ் சிறு சேமிப்பு திட்டங்கள் வருகின்றன. பாதுகாப்பான முதலீடு என்பதோடு, நீண்ட கால நோக்கில் வளத்தை உருவாக்கும் தன்மை கொண்டவையாக அமைகின்றன. எனவே, இந்த திட்டங்களின் வட்டி விகிதம், வரி சேமிப்பு, லாக் இன் காலம் உள்ளிட்ட அம்சங்களை பரிசீலித்து, நிதி இலக்கிற்கு ஏற்ப முதலீடு செய்வது பொருத்தமாக அமையும்.

Leave a Comment