அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு!
பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெற்ற இளநிலை படிப்புகளுக்கான இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் எழுதிய பொறியியல் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மேலும் முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
TRB – 2,098 முதுநிலை ஆசிரியர் காலி பணியிட தேர்வு எப்போது..???
அதன்படி, மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள், இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.