WhatsApp- மூலம் மாணவர்களுக்கு திறனறி தேர்வு.?
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு – தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு . |
தமிழகத்தில் கொரோனா 2 ம் கட்ட அலை பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆண்டும் பிளஸ் 2 தவிர மற்ற மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் கல்வித்திறன் குறையுமோ என கவலையடைந்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பரவல் அச்சமும் நீடிக்கிறது. ஒரு சில பெற்றோர் இணையதளம் மூலம் தேர்வுகளை நடத்த வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து பரிசீலிக்கலாம் எனவும் எதிர்பார்க்கின்றனர்.
நடப்பு கல்வியாண்டில் 9,10,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மிக குறைந்த நாட்களே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தை இணையதளம் மூலம் கற்பதில் பல மாணவர்களுக்கு சிரமங்கள் உள்ளன. இதனிடையே பொதுத்தேர்வும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திறனறி தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் மாணவர்கள் இந்த ஆண்டு கற்ற கல்வியையும் அவர்கள் புரிந்து கொண்டதையும் மதிப்பிட முடியும் என கருதுகின்றனர். மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் கேள்விகளை அனுப்பி பதில்கள் பெற்று அவர்களது திறன் அறியப்படும் எனத்தெரிகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
1 முதல் 5 -ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் …!!!
இதனிடையே மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திறனறித் தேர்வுக்காக பயிற்சி வினாக்கள் அடங்கிய புத்தகங்களை தயாரித்து பள்ளிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தகைய தேர்வு நடத்த முடிவு செய்திருந்தால் ஆசிரியர்கள் , மாணவர் , பெற்றோருக்கு உரிய அவகாசம் கொடுக்கவேண்டும். குறைந்தது ஒன்றரை மாதங்கள் அவகாசம் அளித்து இதை நடத்தினால் மாணவர்கள் மன அழுத்தமின்றி இத்தேர்வை தனியாக எழுத முடியும் என சில பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
.