தேவைப்பட்டால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும்: முதல்வர்..!! - Tamil Crowd (Health Care)

தேவைப்பட்டால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும்: முதல்வர்..!!

 தேவைப்பட்டால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும்: முதல்வர்..!!

கர்நாடகத்தில் தேவை ஏற்பட்டால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

மக்கள் தங்கள் நலனுக்காக விதிகளைப் பின்பற்ற வேண்டும். செவிசாய்க்கவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும் என்று பிதார் நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க…

 தமிழகத்தில் புதிய உச்சம் தொடும் கொரோனா..!! 

மேலும், அதிகரித்து வரும் கரோனா பரவலை கருத்தில்கொண்டு மாவட்டத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிதல், கைசுத்தத் திரவம் பயன்படுத்துதல், சமூக இடைவெளி போன்றவை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் அனைவரும் இதைப் பின்பற்றி எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

பொதுமுடக்கம் அறிவிக்க அரசு தயாராக இல்லை. மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தந்தால் கரோனா வைரஸின் இரண்டாவது அலையிலிருந்து கட்டாயம் மீண்டு வரலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Comment