பள்ளிகளுக்கு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு! - Tamil Crowd (Health Care)

பள்ளிகளுக்கு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

 பள்ளிகளுக்கு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை அனைவருக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் + பொதுத்தேர்வுகள் மட்டும் நேரடியாக நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மே 3 முதல் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 12 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளில் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் அமர வைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறையிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியையும் படிங்க…

முக்கியச் செய்தி:12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் – அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு.!! 

அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். அதன்படி ஒரு வகுப்பறையில் 50 சதவீத இருக்கைகள் படி 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்க வேண்டும்.

மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கலையரங்கம் போன்ற திறந்த வெளிமையங்களில் தனிநபர் இடைவெளியுடன் மாணவர்கள்அமர வைக்கப்பட்டு பாடங்களை நடத்தலாம். மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளி வளாகங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். இவற்றில் ஏதாவது குழப்பங்கள் அல்லது தவறுகள் ஏற்பட்டால் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment