தொலைநிலை கல்வி படிப்பு: நேரடி வகுப்பு ரத்து..!!
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் நடத்தும் நேரடி வகுப்புகள், கொரோனா தொற்று காரணமாக, ‘ஆன்லைன்’ மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்ட தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. ‘மேலும் விபரங்களுக்கு, www.mkudde.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்’ என, இயக்குனர் பொறுப்பு வகிக்கும் ராமசாமி தெரிவித்துள்ளார்.