அதிரடி அறிவிப்பு! 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு!!
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
இந்தியா 2ம் இடம்: அனைத்து மாநில ஆளுநர்களுடன் வரும் 14-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை.!
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு பாதிக்கப்படுகின்றனர். இதனால் மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அம்மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.