மூங்கில் அரிசி; மருத்துவப் பலன்கள் ..!!
முதுமலையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏராளமான இடங்களில் மூங்கில் அரிசி பூத்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட மூங்கில் அரிசி கிலோவுக்கு ரூ.800 வரை விற்பதால் மக்கள் அரிசியைச் சேகரிக்கும் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தியையும் படிங்க…
- மூங்கில் அரிசியை அரைத்துப் பொடியாக்கி அதனைக் குழந்தைகளுக்குக் கூழ் காய்ச்சிக் கொடுக்கின்றனர்.
- அதேபோல மூங்கில் அரிசி மாவு மூலம் தோசை, இட்லி, பலகாரம் உள்ளிட்ட உணவு வகைகளையும் செய்து உட்கொள்கின்றனர்.
- மூங்கில் அரிசியை உணவாக எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பலம், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
- மூங்கில் அரிசியில் அதிகப்படியான கலோரிகள் உள்ளன.
- மேலும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம் உள்ளிட்ட பல சத்துகள் இதில் உள்ளன.
- மூங்கில் அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
- மூட்டு வலி, முட்டியில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், முதுகு வலி, இடுப்பு வலி உள்ளிட்டவற்றுக்கும் இது மருந்தாகச் செயல்படுகிறது.
- உடல் எடையைக் குறைக்கவும் மூங்கில் அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.