முகக்கவசம் அணியாமல் வந்தால் -கொரோனா பரிசோதனை கட்டாயம்..!!
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த செய்தியையும் படிங்க…
இதன்படி பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.இதனை கடைப்பிடிக்க தவறுபவர்களுக்கு அபராதம் என ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதும் பலர் இன்னும் விதிகளை கடைப்பிடிக்கவில்லை.
இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் பொதுஇடங்களுக்கு வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்காக மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் எல்லாம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் முகக்கவசம் அணிவதன் அவசியத்தையும், அணியாமல் செல்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கி கூறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.