தமிழக கோவில்களில் நடக்கும் திருமணங்களுக்கு- கட்டுபாடுகள் அறிவிப்பு! - Tamil Crowd (Health Care)

தமிழக கோவில்களில் நடக்கும் திருமணங்களுக்கு- கட்டுபாடுகள் அறிவிப்பு!

 தமிழக கோவில்களில் நடக்கும் திருமணங்களுக்கு- கட்டுபாடுகள் அறிவிப்பு!

கொரோனா பரவலை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கோயில்களில் நடக்கும் திருமணங்களுக்கும் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசும் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் இப்போது கோயில்களில் நடக்கும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என்றும், கோயில் மண்டபங்களில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணங்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment