உஷார்! இந்த 10 மாநிலங்களுக்கு- மத்திய அரசு எச்சரிக்கை..!! - Tamil Crowd (Health Care)

உஷார்! இந்த 10 மாநிலங்களுக்கு- மத்திய அரசு எச்சரிக்கை..!!

 உஷார்! இந்த 10 மாநிலங்களுக்கு- மத்திய அரசு எச்சரிக்கை..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகம், உட்பட 10 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது.

இந்த செய்தியையும் படிங்க…
நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வரும் நிலையில் இதனை குறைக்க பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.36 கோடி பேர்.

இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா , சத்தீஸ்கர் உட்பட 10 மாநிலங்களில் கொரோனா மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இந்த 10 மாநிலங்களில் மட்டுமே 80.08% கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையின் உயர்மட்ட குழுக்களை களமிறக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் மோடி, துணை ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுடன் நாளை ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment