உடற்பயிற்சி செய்யாதவர்கள் -கொரோனா தொற்று தீவிரமாக இருக்கும்..!! - Tamil Crowd (Health Care)

உடற்பயிற்சி செய்யாதவர்கள் -கொரோனா தொற்று தீவிரமாக இருக்கும்..!!

 உடற்பயிற்சி  செய்யாதவர்கள் -கொரோனா தொற்று தீவிரமாக இருக்கும்..!!

உடற்பயிற்சி இல்லாதவர்கள், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் போது, அது தீவிரமாக இருக்கும் எனவும், அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த ஜோர்னல் ஆப் ஸ்டோர்ட்ஸ் மெடிசன் என்ற இதழ், உடற்பயிற்சி செய்யாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்க ஏற்படும் பாதிப்பு குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடத்தியது. 2020 ஜனவரி முதல் அக்டோபர் வரை கொரோனா பாதித்த 48,440 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 

இந்த செய்தியையும் படிங்க…

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து -ஆலோசனை! 

அவர்களின் சராசரி வயது 47. 5 ல் 3 பேர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு, நீரழிவு, நுரையிரல் பாதிப்பு, இதயம் அல்லது சிறுநீரகம் நோய் அல்லது புற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. 20 சதவீதம் பேர்  ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 30 சதவதம் பேர் 2 அல்லது3 நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 

ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாவது: 

கொரோனா தொற்று பாதிப்பதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் வரை உடற்பயிற்சி செய்யாதவர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும் அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் உயிரிழக்கவும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.

வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை விட, உடற்பயிற்சி இல்லாதவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். புகைப்பழக்கம், உடற்பருமன் அல்லது அதிக ரத்த அழுத்தத்தை விட உடற்பயிற்சி இல்லாதவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 73 சதவீதம் பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Comment