TRB – கணினி பயிற்றுநர் தேர்வு முறைகேடு – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!!
கணினி பயிற்றுநர் தேர்வு முறைகேடு குறித்து இரு நபர் விசாரணைக்குழுவிடம் மனு செய்து நிவாரணம் தேடலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
ஆசிரியர்கள் -சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும்..!!
கணினி பயிற்றுநர்கள் (முதுநிலை ஆசிரியர் நிலை) நியமனத்திற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் 2019ல் அறிவித்தது. செல்வம் என்பவர், ‘தேர்வு நடைமுறைகளில் சில தவறுகள் நடந்தன. தேர்வு அறிவிப்பை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்’ என உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்தார். சில கேள்விகளுக்கு தவறான ‘கீ’ பதில்கள் இடம் பெற்றதால் அதற்குரிய மதிப்பெண் வழங்கி தற்காலிக தேர்வானோர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற உத்தரவிடக்கோரி சில மனுக்கள் தாக்கலாகின.
நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவு:
இதுபோல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கலாகின. அந்நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு சென்னை நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலை டி.பி.ஐ., வளாகம் ஈ.வி.கே.சம்பத் மாளிகையில் விசாரிப்பதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.
முறைகேடுகள்/தவறுகள், வினாத்தாள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டதன் செல்லுபடி தன்மை, ‘கீ’ பதில்களில் தவறுகள் மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்த குறைபாடுகள் குறித்து அக்குழுவை மனுதாரர்கள் அணுகி மனு செய்து நிவாரணம் தேடலாம் என்றார்.