மொழி இலக்கண நூல்கள், பொருள் இலக்கண நூல்கள்
மொழி இலக்கண நூல்கள்
1)நூற்பெயர்:வீரசோழியம்
ஆசிரியர்:புத்தமித்திரர், புத்தசமயம்
காலம் கி.பி:11 -ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன:எழுத்து சொல் பொருள் யாப்பு அணி பற்றிக் கூறும் ஐந்திலக்கண நூல்.
காரிகை யாப்பில் இயற்றப்பட்டது.
வடமொழி.
2)நூற்பெயர்:இலக்கண விளக்கம்
ஆசிரியர்:வைத்தியநாத தேசிகர், சைவர்
காலம் கி.பி:17-ம்நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன:எழுத்து சொல் பொருள் யாப்பு அணி பற்றிக் கூறும் நூல்.
குட்டித் தொல்காப்பியம். 941 நூற்பாக்கள்
ஆசிரியரே உரை எழுதியுள்ளார்.
3)நூற்பெயர்: தொன்னூல் விளக்கம்.
ஆசிரியர்:வீரமாமுனிவர், கிறித்துவர்
காலம் கி.பி:18-ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன:ஐந்திலக்கண நூல், 370 நூற்பாக்கள்
4)நூற்பெயர்:முத்துவீர உபாத்தியாயர், சைவர்
ஆசிரியர்:18-ம் நூற்றாண்டு
காலம் கி.பி:18-ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன:ஐந்திலக்கண நூல், 15 இயல்கள், 1288 நூற்பாக்கள்
5)நூற்பெயர்:சுவாமிநாதம்
ஆசிரியர்:சுவாமிநாத கவிராயர்,சைவர்
காலம் கி.பி:19-ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன:ஐந்திலக்கண நூல், 15 மரபுகள், 201 நூற்பாக்கள்
6)நூற்பெயர்:அறுவகை இலக்கணம்
ஆசிரியர்:வண்ணச்சரபம், தண்டபாணி சுவாமிகள், சைவர்
காலம் கி.பி:19-ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன:எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமைஎனும் அறுவகை இலக்கணங்கள் கூறும் நூல்.
786 நூற்பாக்கள்
7)நூற்பெயர்:நேமிநாதம்
ஆசிரியர்:குணவீரபண்டிதர், களத்தூர், சமணசமயம்
காலம் கி.பி:13-ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன:எழுத்து, சொல் பற்றிக் கூறும் மொழி இலக்கண நூல்.
99 வெண்பாக்கள்
8)நூற்பெயர்:நன்னூல்
ஆசிரியர்:பவணந்தி முனிவர், சமணர், மைசூர் நாட்டின் சனநாதபுரம்.
காலம் கி.பி:13-ம் நாற்றாண்டு
நூல் பொருள் முதலியன:எழுத்து, சொல் பற்றிக் கூறும் மொழி இலக்கண நூல்,
462 நூற்பாக்கள்
9)நூற்பெயர்:இலக்கண விளக்கச்சூறாவளி.
ஆசிரியர்:சிவஞான முனிவர், சைவர்
காலம் கி.பி:18-ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன:எழுத்து, சொல் என்னும் இரண்டு அதிகாரங்கள்
10)நூற்பெயர்:பிரயோக விவேகம்
ஆசிரியர்:சுப்பிரமணிய தீட்சிகர், ஆழ்வார் திருநகரி
காலம் கி.பி:17-ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன:வடமொழியில் உள்ள பிரயோக விவேகத்தின் தழுவல், 4 படலங்கள், 51 காரிகைகள்
11)நூற்பெயர்: இலக்கணக்கொத்து
ஆசிரியர்:சுவாமிநாத தேசிகர்
காலம் கி.பி:17-ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன:வேற்றுமையியல், வினையியல், ஒழியியல், -3 இயல்கள், 131 நூற்பாக்கள்.
பொருள் இலக்கண நூல்கள்;
1)நூற்பெயர்:இறையனார் அகப்பொருள்
ஆசிரியர்:இறையனார்
காலம் கி.பி:3 -ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன:அகப்பொருள் நூல், முச்சங்க வரலாறு கூறும்.
2)நூற்பெயர்: நம்பி அகப்பொருள்
ஆசிரியர்:நாற்கவிராச நம்பி புளியங்குடி
காலம் கி.பி:12 -ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன: அகப்பொருள் நூல். 5 இயல்கள், 252 நூற்பாக்கள்
3)நூற்பெயர்: மாறன் அகப்பொருள்
ஆசிரியர்: திருக்குருகைப் பெருமாள் கவிராயர், வைணவர்
காலம் கி.பி:16 -ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன: அகப்பொருள் நூல். 5 இயல்கள், 363 நூற்பாக்கள், காரிகையாப்பில் இயன்றது.
4)நூற்பெயர்:களவியற் காரிகை
ஆசிரியர்:தெரியவில்லை
காலம் கி.பி:-
நூல் பொருள் முதலியன:களவொழுக்கம் பற்றிக் கூறும் நூல். முழுமையாக கிடைக்கவில்லை. காரிகையாப்பில் இயன்றது.
5)நூற்பெயர்:தமிழ்நெறி விளக்கம்
ஆசிரியர்:தெரியவில்லை
காலம் கி.பி:-
நூல் பொருள் முதலியன: அகப்பொருள் நூல் தொடக்கமும் முடிவும் கிடைக்கவில்லை.
6)நூற்பெயர்: பன்னிரு படலம்
ஆசிரியர்:பன்னிருவர்
காலம் கி.பி:8 -ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன: புறப்பொருள் நூல்
7)நூற்பெயர்:புறப்பொருள் வெண்பாமாலை
ஆசிரியர்:ஐயனாரிதனார்
காலம் கி.பி:9 -ம் நூற்றாண்டு
நூல் பொருள் முதலியன:புறப்பொருள் நூல், 12 திணைகளில் புறப்பொருள் கூறும். 361 பாடல்கள்