தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அவசர கடிதம்- "கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்"..!! - Tamil Crowd (Health Care)

தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அவசர கடிதம்- “கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்”..!!

 தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அவசர கடிதம்- “கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்”..!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. அதே சமயம் முன்பை விட தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருகிறது.

இந்த செய்தியையும் படிங்க…

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தடுப்பூசி இல்லை என்று போர்டு எழுதி மாட்டுகின்றனர். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலும் இதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இருப்பினும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்றே சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறிவருகிறார்.

இச்சூழலில் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. தற்போது 45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதால், கூடுதலாக தடுப்பூசி தேவைப்படுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆகவே தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியும், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் கொடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Comment