மத்திய அரசு அதிகாரிகள் – வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். டெல்லியில் அறிவிப்பு!
கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் வீட்டில் இருந்த படியே பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் 50 விழுக்காடு ஊழியர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என்றும், வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்கள் கண்டிப்பாக அலுவலகங்களுக்கு வரக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.