உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கொரோனா தீவிரமாகாது!
இந்தியாவில் கொரோனா அசுர வேகம் எடுத்து பரவி வருகிறது. முதல் அலையை தற்போது உருவாகியிருக்கும் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. மேலும் இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13.89 கோடி பேர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2.43 கோடி பேர். இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மருத்துவ ஆய்வு நிறுவனம் பரவலைக் கட்டுப்படுத்த செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தினமும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கொரோனா தீவிரமடைவதில்லை.அவர்கள் அனைவரும் லேசான அறிகுறிகளுடன் குணமடைந்துள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க…
கரோனா வைரஸ் தொற்றின்- புதிய அறிகுறிகள்..!!
உடல் அசைவுகள் இருக்கும் போதுதான் நுரையீரலின் செயல்பாடு சிறப்பாக இருக்க முடியும். நுரையீரல் செயல்பாடு சரியாக இருக்கும் போது நுரையீரலில் தாக்குதல் ஏற்படுவது குறையும். நுரையீரலில் இருந்து கிருமிகள் வெளியேறும். அதனால், ஆரோக்கியமான உணவுடன் அன்றாட உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய அறிவுறுத்தியுள்ளது.