அரசு நிர்வாகங்களில் சம்பள தேதி மாற்றம்..! ஊழியர்கள் கவலை..!
தமிழகத்தில்,அரசு போக்குவரத்துக்கு கழகங்களின் அதிகாரிகள் தாங்கள் விரும்பிய போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம் என்ற அரசின் அறிவிப்பு, ஊழியர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும், மாநகர் போக்குவரத்து கழகம்,அரசு விரைவு போக்குவரத்து கழகம்,விழுப்புரம் போக்குவரத்து கழகம் போன்றவற்றில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.மாத கடைசி தேதியில் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவது வழக்கம்.
இதனையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள்,”சம்பள தேதியை மாற்றினால் எங்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் ஏற்படும்.ஆகையால்,பழைய முறையிலே சம்பளம் போட வேண்டும்” என்று வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தினர்..
இதற்கு முன்னதாக சம்பள உயர்வு, தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு கட்டமாக போராட்டங்களை தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் முன்னெடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.