தமிழகத்தில் ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டை விட வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் ஒவவொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கரோனா வைரஸ் தொற்றின்- புதிய அறிகுறிகள்..!!
இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. தமிழகத்திலும் ஒரு நாளின் கொரோனா பாதிப்பு 8,000-ஐ தாண்டியுள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மதக்கூட்டங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள், பேருந்துகளில் நின்று பயணம் செய்ய தடை, உணவகங்கள், டீக்கடைகள், வணிக வளாகங்களில் 50 சதவீத அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கடந்த 10ஆம் தேதி முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டன.
தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- அமல்படுத்த வாய்ப்பு|