தமிழகத்தில்- கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு.?
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. எனினும் தினசரி பாதிப்பு 8,000ஐ தாண்டியுள்ளது. இந்தச்சூழ்நிலையில், கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த செய்தியையும் படிங்க…
அரசு நிர்வாகங்களில் சம்பள தேதி மாற்றம்..! ஊழியர்கள் கவலை..!
தமிழக முதலமைச்சர் நாளைமறுநாள் சென்னை திரும்பியவுடன் அவருடன் ஆலோசித்து, அதிகாரபூர்வ அறிவிப்வை வெளியிட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களோடு நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்தும் அறிவிப்பினை தமிழக அரசு விரைவில் வெளியிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.