அண்ணா பல்கலை அரியர் தேர்வு அறிவிப்பு..!!
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா பரவலால், அனைத்து கல்லுாரிகளின் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன; தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும், ‘ஆல் பாஸ்’ என, தமிழகஅரசு கடந்தாண்டு அறிவித்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்வியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஆல் பாஸ் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அரியர் தேர்வு நடத்தப்படும் என, தமிழக உயர் கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில், அண்ணா பல்கலை சார்பில், முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை, நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, வரும், 20ம் தேதி முதல், அரியர்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, ஏற்கனவே அரியர் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.