பிளஸ் 2 (+2)தேர்வு -ஹால் டிக்கெட் விரைவில் வெளியீடு..!!
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பிளஸ் 2(+2) பொதுத் தேர்வு மே 5 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பிளஸ் 2(+2) வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நேற்று முன்தினம் தொடங்கின. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த செய்தியையும் படிங்க…
பிளஸ் 2( 2) மாணவா்களுக்கு- தோ்வுக்கு விடுமுறை அறிவிப்பு..!!
செய்முறை தேர்வுகள் முடிந்த பின் மாணவர்களுக்கு ஆல் டிக்கெட் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது: கரோனா பரவலால் மாணவர்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு எழுதுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செய்முறை தேர்வு 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அதன்பின் ஓரிரு நாட்களில் மாணவர்களுக்கான ஆல் டிக்கெட் இணையவழியில் வெளியிடப்படும் பள்ளிகளில் நேரில் சென்றும் ஆல் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் விரைவில் வெளியிடப்படும் என்றனர்.