கொரோனா(CORONA)-என் கேள்விக்கு என்ன பதில்..
கேள்வி: கொரோனா(Corona) என்ற தலைப்பில் பாடல் ஒன்றை எழுதுக? (1×5=5)
பதில்:
கொரோனா
கொரோனா…!
கொரோனா…!
நீ பிறந்த இடம் சைனா,
காற்றில் நாடு விட்டு நாடு வந்த பிளேனா…
பல பேர் வாழ்க்கைய அழிச்ச வீணா..
நீ எங்க நாட்ட விட்டு ஓடிடு தானா..
இப்படியே காலம் ஓடிப் போனா..
நான் கட்டாயமா பெயிலு ஆயிடுவேன் பாரு வேண்ணா..
கேள்வி: கொரோனாவிற்கு பிடித்த படம்?(1×5=5)
பதில்:
தசாவதாரம்( கெட்டப்ப சும்மா சேஞ் பண்ணிகிட்டே இருக்கு இல்ல).
எத்தன அவதாரந்தா எடுக்குமோ தெரியல.
கேள்வி: கொரோனா(Corona) பற்றி சிறு குறிப்பு வரைக?(1×5=5)
பதில்:
பெயர்: கொரோனா
பிறந்த ஊர்: சைனா
பிறப்பு: 2019 (இறுதியில்)
இறப்பு: எப்பொழுது என்று தெரியவில்லை.
வேறு பெயர்கள் சில: டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரான், ….
சாதனை: பல கோடி உயிர்களை கொன்று குவித்தது,
உலகையே ஆட்டிப் படைப்பது,
மேலும் பல சாதனைகள்.
கேள்வி:கொரோனாவின் முக்கிய விடுமுறை நாட்கள் என்னென்ன?(1×5=5)
பதில்:
கொரோனாவின் முக்கிய விடுமுறை நாட்கள் பின்வருமாறு
1) தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் நாட்கள்
2) தேர்தல் நடைபெறும் நாட்கள்
3) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாட்கள்
4)தேர்தல் வெற்றி, தோல்வி அறிவிக்கும் நாட்கள்
5)முழு ஊரடங்கு நாட்கள்(குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மட்டும்)
மேற்குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கொரோனா விடுமுறை எடுத்துக் கொண்டு வேறு ஊருக்கு சென்று விடும்.
முக்கிய குறிப்பு:
*****யாரையும் காயப்படுத்துவதற்காக அல்ல****