தமிழகத்தின் இந்த மாவட்டங்களில்- மழைக்கு வாய்ப்பு.! - Tamil Crowd (Health Care)

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில்- மழைக்கு வாய்ப்பு.!

 தமிழகத்தின் இந்த மாவட்டங்களில்- மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தின் தென் மண்டலத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில்,

“கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 2.1 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் தென் தமிழக (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த செய்தியையும் படிங்க…

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிர்ச்சி !! 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

20, 21-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பில்லிமலை எஸ்டேட்டில் (நீலகிரி) 3 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

Leave a Comment