SBI ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்: இத்தனை சேவைகளுக்கு கட்டணம் இல்லை..!! - Tamil Crowd (Health Care)

SBI ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்: இத்தனை சேவைகளுக்கு கட்டணம் இல்லை..!!

 SBI ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்: இத்தனை சேவைகளுக்கு கட்டணம் இல்லை..!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, (SBI)தனது வாடிக்கையாளரக்ளுக்கு ஜீரோ பேலன்ஸ் சேவையை வழங்கி வருகிறது. இந்த ஜீரோ பேலன்ஸ் திட்டத்தின் மூலம் கணக்கு திறக்கும் போது, குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க தேவையில்லை. மேலும், இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சில குறைந்தபட்ச சேவைகளை எஸ்பிஐ இலவசமாக வழங்கி வருகிறது. புதிதாக கணக்கு திறக்கும் நேரத்தில், வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம், டெபிட் கார்டுகளை வழங்குகிறது. தொகை வைப்பு மற்றும் திரும்பப் பெறுவதற்கான வசதிகளும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. கூடுதலாக, நீண்ட நாள்களாக செயலற்ற நிலையில் உள்ள கணக்குகளுக்கு அபராத கட்டணம் வசூலிக்க வங்கி நிர்வாகம் தடைசெய்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

உங்க SB அக்கவுண்டில் இவ்ளோ பணம்தான் போடலாம்: தாண்டினால் ஐ.டி வரும்! 

எஸ்பிஐ ஜீரோ பேலன்ஸ் கணக்கின் ஸ்பெஷல்கள் :

  • எந்தவொரு தனிநபரும் கணக்கு தொடங்குவதற்கான முறையான ஆவணங்களை வைத்திருக்கும் நிலையில், இந்த கணக்கைத் திறக்க முடியும்.
  • எந்தவொரு கட்டணமும் இன்றி சேமிக்கத் தொடங்குவதற்காக சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்காகவே பெரும்பாலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கை நாட்டின் அனைத்து எஸ்பிஐ-வங்கி கிளைகளிலும் திறக்கலாம் . குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை. அதிகபட்ச இருப்புக்கு எந்த வரம்பும் இல்லை.
  • இந்த கணக்கு வைத்திருப்போருக்கு காசோலை புத்தக வசதி வழங்கப்படவில்லை. இந்த கணக்கை வைத்திருப்போர் பணத்தை திரும்ப பெற, வங்கி கிளைகளை அணுகலாம் அல்லது ஏடிஎம்கள் வழியாக மட்டுமே திரும்பப் பெற முடியும்.
  • கணக்கு வெற்றிகரமாக திறந்தவுடன் கணக்கு வைத்திருப்பவருக்கு அடிப்படை ரூபே ஏடிஎம் – டெபிட் கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த கணக்குக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.
  • ஒரு மாநில அல்லது மத்திய அரசின் கீழ் செயல்படும் வங்கியிடமிருந்து பெறப்பட்ட காசோலைகளை டெபாசிட் செய்ய, கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை.
  • நீண்ட நாள்களாக செயல்படாத கணக்குகளை மீண்டும் செயல்படுத்துவதில் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. வாடிக்கையாளருக்கு அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு இருந்தால், அவர் சேமிப்பு வங்கி கணக்கை திறக்க முடியாது.
  • ஒரு மாதத்தில், எஸ்பிஐ மற்றும் பிற வங்கியின் ஏடிஎம்களில் பணம் பெறுதல், நான்கு முறை இலவசமாக திரும்பப் பெறலாம். வழக்கமான சேமிப்புக் கணக்குகளைப் போலவே பூஜ்ஜிய இருப்பு கணக்குகளுக்கும் அதே வட்டி விகிதத்தை எஸ்பிஐ வழங்குகிறது. ஒரு லட்சம் வரை மற்றும் அதற்கு மேல் வைப்புத்தொகையில், வங்கி 2.70 சதவீத ஆண்டு வட்டி விகிதத்தை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment