12,000 தபால் ஓட்டுகள் எப்போது வரும்- விரைவில் அனுப்ப தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தல்..!! - Tamil Crowd (Health Care)

12,000 தபால் ஓட்டுகள் எப்போது வரும்- விரைவில் அனுப்ப தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தல்..!!

 12,000 தபால் ஓட்டுகள் எப்போது வரும்- விரைவில் அனுப்ப தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தல்..!!

 12,000 தபால் ஓட்டுகள் எப்போது வரும். ஸ்டாம்ப் ஒட்டாமல் தபாலில் அனுப்பினால் போதும் என அறிவுறுத்தல். தபால் ஓட்டு காண 13 -சி கவரில் ஸ்டாம்ப் ஒட்ட தேவையில்லை. தபால் மூலம் மட்டுமே ஓட்டுகளை உரிய தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த செய்தியையும் படிங்க…

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்..!! 

 இன்னும் 12 ஆயிரம் தபால் ஓட்டுகள் வரவில்லை. விரைவாக தபால் ஓட்டுகளை அனுப்ப வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்த 6-ம் தேதி நடைபெற்றது .வாக்குகள் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. ஆயுதப்படை போலீசார், போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ராணுவத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்கள், அவர்களுடன் தங்கி உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் தபால் ஓட்டு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 25 ஆயிரத்து 155 தபால் ஓட்டுக்கள் உள்ளது. இவர்களுக்கு அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தபால் ஓட்டு களையும் அதற்கான ஆவணத்தையும் அவர்கள்  கொடுத்த முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி உள்ளனர் .

அரசு ஊழியர்கள் ஓட்டுக்களை அவர்கள் விரும்பும் சின்னத்தில் வாக்களித்து அதனை கொடுக்க சிலர் கலெக்டர் அலுவலகம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு அலைகின்றனர். இது தேவை இல்லை. தபால் ஓட்டுகளை பதிவு செய்து அதற்கான வழங்கப்பட்ட கவரில் 13c உள்ளே வைத்து தபால் நிலையத்தில் போட்டு விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆசிரியர்கள், ஊழியர்கள், சிலர் தபால் ஓட்டுகளை தபால் நிலையத்தில் போட முயலும் போது ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும் என தபால் ஊழியர்கள் கூறியுள்ளனர். அதற்கான தொகையையும் வசூல் செய்துள்ளனர். சில ஸ்டாம்ப் ஒட்ட மறுத்ததால் தபால் நிலைய ஊழியர்கள் இடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில் தபால் ஓட்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தபால் ஓட்டு ஓட்டுடன் 13k உறுதிமொழி படிவம் 13c  தேர்தல் அதிகாரியின் முகவரியுடன் கூடிய கவருடன் தபால் அனுப்பியுள்ளோம்.

 ஊழியர்கள் அதனைப் பெற்று தபால் ஓட்டு சீட்டில் தனது வாக்கை பதிவு செய்து அவற்றுடன் 13k உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து  கையெழுத்து போட்டு தபால் ஓட்டு சீட்டு மற்றும் 13k உறுதிமொழி படிவம் இரண்டையும் 13c கவரில் உள்ளே வைத்து அவரை ஒட்டி தபால் நிலையத்தில் போட்டு விட வேண்டும். ஒட்ட தேவையில்லை. நேரடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு தபால் ஓட்டு வந்துவிடும்.

இந்த செய்தியையும் படிங்க…

கொரோனா – கல்வித்துறை கட்டுப்பாடுகள் என்னென்ன..?? | 

 அலுவலகத்தில் உள்ள அதிகாரி பதிவு செய்து பெற்றுக் கொண்டு தபால் ஓட்டு பெட்டியில் போட்டு விடுவார் .நேரில் வந்து யாரும் கொடுக்க தேவை இல்லை. தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரம் பேர் தபால் ஓட்டுகளை பதிவு செய்து அனுப்பி உள்ளனர். இன்னும் 12 ஆயிரம் தபால் ஓட்டுகள் வரவில்லை .விரைவாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்பாகவே மே 1-ஆம் தேதிக்குள் தபால் ஓட்டுகளை அனுப்பினால் நல்லது என்றார்.

Leave a Comment