முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்- கொரோனாவால் பாதிப்பு.!
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியையும் படிங்க…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி -மருத்துவமனையில் அனுமதி..!!
இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள் திரையுலக பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் உள்பட பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பதும், அதில் ஒருசிலர் பலியாகி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன