இந்திய வகை கொரோனா: தடுப்பூசிக்கு கட்டுப்படாதா? பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு..!!
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வகை மிகவும் வேகமாகப் பரவக்கூடியதா?, தடுப்பூசிகளில் இருந்து தப்பிவிடும் ஆற்றல் கொண்டதா? என்பது குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
எனினும் இந்தியாவில் பரவும் கொரோனா “கவலைக்குரிய வகை” என்பதற்குப் போதுமான தரவுகள் இல்லை. என மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் சேர்த்து சுமார் 70 இந்திய வகைக் கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த செய்தியையும் படிங்க…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி -மருத்துவமனையில் அனுமதி..!!
“இந்திய வகைக் கொரோனா தொற்று சிலரிடம் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம். அவை பயணத்தின் மூலம் வந்தவையல்ல. அவை எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பதை அறிய ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார் ஹாப்கின்ஸ்.
“தீவிரமாகப் பரவக்கூடியதா, தடுப்பூசியில் இருந்து தப்பிவிடக்கூடியதா என்பவை எல்லாம் தெரிந்தால்தான் நாம் எச்சரிக்கை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இப்போதைக்கு அது உறுதியாகத் தெரியாது.”
இந்திய வகைக் கொரோனா தொற்றுடைய 73 பேர் இங்கிலாந்திலும் 4 பேர் ஸ்காட்லாந்திலும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்திய வகை குறித்த விவரங்களை உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்று பெருந்தொற்று நிபுணர் மைக் டைல்டெஸ்லே வலியுறுத்துகிறார்.
“இந்திய வகைக் கொரோனாவில் கவலைதரும் அம்சமாகத் தோன்றக்கூடியது, அதன் இரட்டைத் திரிபு. வேகமாகப் பரவக்கூடியதுடன், தடுப்பூசிகளுக்கு போதிய பலனில்லாமல் செய்துவிடும்.”
“அப்படி ‘இருக்கலாம்’ என்பதுதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கான ஆதாரங்களைப் பெற முயற்சித்து வருகிறோம்”
“கவலைதரக்கூடிய தென்னாப்பிரிக்க, இந்திய கொரோனா வகைகள் பிரிட்டனில் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன” என்றார்.
இந்திய வகையைத் தவிர பிற கொரோனா வகைகள் குறித்தும் பேசிய ஹாப்கின்ஸ், “தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவும் கொரோனா வகையைத் தடுப்பதில் போதிய திறன் இல்லை” என்றார்.
“இருப்பினும் நோய் தீவிரமடைவதையும், இறப்புகளையும் தடுப்பூசிகள் தடுக்கும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்” என்றார் ஹாப்கின்ஸ்.