(IOB)இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு-தேர்வு இல்லை..!! - Tamil Crowd (Health Care)

(IOB)இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு-தேர்வு இல்லை..!!

 (IOB)இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு-தேர்வு இல்லை..!!

 இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Senior Economist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் 29.04.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலிப்பணியிடங்கள்:

ஒப்பந்த அடிப்படையில் மூத்த பொருளாதார நிபுணர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

01.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்ச வயதானது 62 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,00,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது.

பணியமர்த்தப்படும் இடம்:

Short-list செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

வங்கியில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் “www.iob.in” என்ற இணைய முகவரி மூலம் 19.04.2021 முதல் 29.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Official PDF Notification – https://www.iob.in/upload/CEDocuments/iobRecruitmentEconomistContract.pdf

Apply Online – https://iobnet.org:4441/recruitApp/RecApplicationAction.do?Method=MainPage

Leave a Comment