குடிமை பணிகள்- நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு: யுபிஎஸ்சி(UPSC)..!!
நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் குடிமை பணிகள் நேர்முகத்தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய அரசு பணியாளா் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) (UPSC)அறிவித்துள்ளது.
ஐஏஎஸ்(IAS), ஐபிஎஸ்(IPS), ஐஎஃப்எஸ்(IFS) உள்ளிட்ட பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக குடிமை பணிகள் தேர்வை யுபிஎஸ்சி(UPSC) நடத்தி வருகிறது. இந்நிலையில் தில்லியில் யுபிஎஸ்சி(UPSC)யின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சூழல், கரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை. சாமானிய மக்கள் அதிர்ச்சி.!!
இந்தக் கூட்டத்தை தொடா்ந்து யுபிஎஸ்சி(UPSC) வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் கரோனா பரவல் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 26-ஆம் தேதி முதல் ஜூன் 18-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த குடிமை பணிகள் நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதிகள் உரிய நேரத்தில் யுபிஎஸ்சி(UPSC) வலைதளத்தில் வெளியிடப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.