WhatsApp, வாய்மொழி தகவலை பின்பற்றும் கல்வி அதிகாரிகள் – மன உளைச்சலில் ஆசிரியர்கள் !
தமிழகத்தில் கல்வித்துறை உத்தரவின்றி வாய்மொழி உத்தரவு மற்றும் வாட்ஸ் ஆப் தகவல் அடிப்படையில் ஆசிரியர்களை பள்ளிக்கு வரச் சொல்லி கொரோனா தொற்றுக்கு ஆளாக்கும் அதிகாரிகளால் மனஉளைச்சல் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
(IOB)இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு-தேர்வு இல்லை..!!
பிளஸ் 2 தவிர பிற வகுப்புகள், குறிப்பாக தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர்களே வராத நிலையில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு சென்று வருவதால் 300க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதித்துள்ளனர். 17 பேர் இறந்துள்ளனர்.அரசின் உரிய உத்தரவுகள் இன்றி பல மாவட்டங்களில் கல்வி அதிகாரிகளின் தனிப்பட்ட முடிவால் ஆசிரியர்களை பள்ளிக்கு வரச்சொல்லி வற்புறுத்துகின்றனர். அவர்கள் மீது நீதிமன்றம் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.