தாமதமாகும்- எலெக்‌ஷன் ரிசல்ட்..!! வாக்கு எண்ணிக்கை- நேரம் மாற்றம்..!! - Tamil Crowd (Health Care)

தாமதமாகும்- எலெக்‌ஷன் ரிசல்ட்..!! வாக்கு எண்ணிக்கை- நேரம் மாற்றம்..!!

 தாமதமாகும்- எலெக்‌ஷன் ரிசல்ட்..!! வாக்கு எண்ணிக்கை- நேரம் மாற்றம்..!!

மே 2ஆம் தேதி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணி தொடங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள இன்னும் 10 நாட்களே இருக்கின்றன. மே 2ஆம் தேதி ஐந்து மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. கொரோனா பரவலுக்கு இடையே தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது.

இந்த செய்தியையும் படிங்க…

 (IOB)இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு-தேர்வு இல்லை..!! 

முன்னதாக ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முழுமுடக்க உத்தரவு பிறக்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணும் தினமான மே 2ஆம் தேதியும் ஞாயிறு என்பதால் முழு முடக்க உத்தரவு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் மே 2ஆம் தேதி முழு முடக்கம் அல்ல என்று சத்ய பிரதா சாகு தெளிவுப்படுத்தினார். இந்நிலையில் அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என சாகு தெரிவித்துள்ளார்.

வழக்கமாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஆனால் இந்த முறை 30 நிமிடங்கள் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. ஏனென்றால் காலை 8 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படுவதால் 8.30 மணிக்கு தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என கூறியுள்ளார்.

தபால் வாக்குடன் , வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ண தொடங்கப்படும் என அவர் கூறினார். வாக்கு பதிவு இயந்திரங்கள் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் இதுவரை எந்த தவறும் நிகழவில்லை என தெரிவித்தார்.

Leave a Comment