10 ஆம் வகுப்பு தேர்வு- ஜூன், ஜூலையில் வாய்ப்பு..!!
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவிலான தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
இதனிடையே கொரோனா பரவலால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் வரும் மே 3 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா பரவலால் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
(IOB)இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு-தேர்வு இல்லை..!!
இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க பள்ளி அளவிலான தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாக 35 வழங்கப்படும் நிலையில் தேர்வு 35 மதிப்பெண்கள் விட கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அந்தந்த பள்ளி அளவில் நடைபெறும் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டுமென்ற கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி அளவிலான தேர்வு ஜூன் ஜூலையில் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.