அரசுப்பள்ளி மாணவிகள்- 7 பேருக்கு கொரோனா.!
தென்காசி அருகே அரசுப்பள்ளி மாணவிகள் 7 பேருக்கு கொரோனா.
தென்காசி அருகே அரசுப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 7 பேருக்கும், 3 ஆசிரியைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மாறாந்தை பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியை ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
இதனை அடுத்து, பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
கசிந்த 53கோடி facebook- பயனர்களின் கணக்குகளில் உங்களுடையதும் ஒன்றா? கண்டறிய உதவும் இணையதளம்..!!
அதன் படி, மாறந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவர்கள், ஆசிரியைகள் என 77 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், 7 மாணவிகள் மற்றும் 2 ஆசிரியைகளுக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
இதனை அடுத்து, நோய் தொற்றுக்கு உள்ளான அனைவரும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அரசுப் பள்ளியில் ஆசிரியைகள், மாணவர்கள் என 10 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.