Bridge course மற்றும் work book காணொளிகள் தயாரித்து- கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை..!! - Tamil Crowd (Health Care)

Bridge course மற்றும் work book காணொளிகள் தயாரித்து- கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை..!!

 Bridge course மற்றும் work book காணொளிகள் தயாரித்து- கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை..!!

இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகம் ( Bridge Course ) மற்றும் பயிற்சி புத்தகம் ( Work Book ) காணொலிகள் தயாரித்து கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் சார்ந்த குறிப்பு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது .

TV Program Schedule (22.04.2021 to 10.05.2021)

channel list– click here

Work Book Kalvi TV Programme Schedule-click here

(22.04.2021 to 13.05.2021)

 dir.pro-click here to download

COVID 19 பெருந்தொற்றுக் காரணமாக பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்த காரணத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்யும் பொருட்டு 11 முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் , 1 முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சிபுத்தகமும் உருவாக்கப்பட்டுள்ளது . இணைப்புப் பாடப்பயிற்சி புத்தகம் ( Bridge Course ) || முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு தொகுதிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 

தொகுதி 1:

தொகுதி 1 – ல் தமிழ் , ஆங்கிலம் , பாடங்களும் தொகுதி 11 – ல் அறிவியல் , சமூக அறிவியல் பாடங்களும் , கணிதப்பாடமானது இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முதல் பிரிவு முதல் தொகுதியிலும் இரண்டாம் பிரிவு இரண்டாம் தொகுதியிலும் இடம் பெற்றிருக்கும் . ஒவ்வொரு பாடமும் 10 நாட்கள் பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

பயிற்சி புத்தகம் ( Work Book ) :

பயிற்சி புத்தகம் ( Work Book ) ஒரு பாடத்திற்கு ஒரு புத்தகம் என்ற அடிப்படையில் 1 முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான பதில்களை  பயிற்சி புத்தகத்திலேயே மாணவர்கள் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகம் ( Bridge Course ) பயிற்சி புத்தகம் ( Work Book ) மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வலுவூட்டவும் , தாமாகவே பயிற்சி ( Practice ) செய்து கற்பதற்கும் பெரிதும் உறுதுணை செய்யும் . தற்போது பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி , மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்கட்டமாக இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகமும் ( Bridge Course ) இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் ( Work Book ) காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

Leave a Comment