கடலை எண்ணெய்யில்- உள்ள சத்துக்கள்..!!
- சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது.
- நிலகடலை அதிகமாக உற்பத்தியாகும் இந்தியாவில், மலிவான விலையில் கிடைப்பதால் இதை அலட்சியப்படுத்தி வருகிறோம்.
- நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
- கடலை எண்ணெய்யில் போலிக் அமிலம் நிறைந்துள்ளதால், தினமும் தவறாது கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தால், மகப்பேறு எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- கடலை எண்ணெய்யில் உள்ள நியாசின் சத்து மூளை வளர்ச்சி, ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவுகிறது.
- கடலை எண்ணெய்யில் அடங்கியுள்ள ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதனால் மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவது தவிர்க்கபடுகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைக் கட்டி, நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
- நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
- கடலையில் அதிகளவு புரோட்டின் நிறைந்து உள்ளது. அதேபோல இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-டி போன்றவையும் நிறைந்துள்ளது. அதாவது, அசைவ உணவு சாப்பிடாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலை சாப்பிடலாம்.