1,000 ரூபாய்க்கு விலை போகாமல்- குறைந்தபட்சம், ஒரு லட்சம் ரூபாயாவது கேட்போம்..!!
நம் நாட்டில், மக்கள் பிரதிநிதியாவதற்கு முதல் தகுதியே, அவர் மெகா கோடீஸ்வரராக இருக்க வேண்டும் என்பது தான்.எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றால், அவரிடம், 20 கோடி ரூபாய் வரை, சர்வ சாதாரணமாக செலவு செய்யும் அளவிற்கு, பண பலம் வேண்டும். எம்.பி., பதவிக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என, நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்!தற்போது நடக்கும், ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில், இதுவரையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பணம், 1,000 கோடி ரூபாய் என்பதும்; அதில், 446.28 கோடி ரூபாய் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதும் அதிர்ச்சியான செய்தி.
இந்த செய்தியையும் படிங்க…
பிங்க் வாட்ஸ் ஆப் அபாயம்-சைபர் கிரைம் எச்சரிக்கை..!!
தப்பித்தவறி யாராவது தேர்தலில் போட்டியிட்டால், அவரை மக்கள், படுதோல்வி அடைய செய்வர்.மக்களுக்கும் தெரியும், இனி நேர்மையானவர் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று.நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், இரு திராவிடக் கட்சிகளும், ஒவ்வொரு தொகுதிக்கும், கோடிக்கணக்கான ரூபாய் அனுப்பி வைத்துள்ளன.
அவை, கடைநிலை வாக்காளர் வரை, 300 அல்லது 500 ரூபாயாக சென்றடைந்துள்ளது. ரேஷன் கடையில் விலையில்லா அரிசி வாங்கி, உயிர் வளர்க்கும் லட்சக்கணக்கான மக்கள் வாழும் தமிழகத்தில், ஒரு வேளை உணவுக்காக, பல கோடி ரூபாய் செலவழித்து, வெளிநாடு செல்லும் அளவிற்கு, மக்கள் பிரதிநிதிகள் செல்வச் செழிப்பில் உள்ளனர்.எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்க உள்ள, 234 மெகா கோடீஸ்வரர்களிடம், நாம் கையேந்தி நிற்போம். அவர்கள், நம் வரிப்பணத்தில், நமக்கு விலையில்லா பொருட்களைக் கொடுத்து, நாட்டை கொள்ளையடிப்பர்.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா பாதிப்பால்- இளம் நடிகர் உயிரிழப்பு !!
நாம் கையேந்துவதையும், அவர்கள் கொள்ளையடிப்பதையும் நிறுத்தவே போவதில்லை! நம்மிடம் கொள்ளையடித்த பணம், கோடிக்கணக்கான ரூபாய், அரசியல்வாதிகளிடம் குவிந்துகிடக்கிறது. ஆகவே, அடுத்து வரும் தேர்தல்களில், 1,000 ரூபாய்க்கு விலை போகாமல், குறைந்தபட்சம், ஒரு லட்சம் ரூபாயாவது கேட்போம். அதை கொடுப்பதற்கும், வேட்பாளரிடம் பணம் இருக்கிறது; கேட்பதற்கு, நாம் தான் தயங்குகிறோம்.