கல்லூரி, பல்கலை. மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே தேர்வு: கல்வி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு..!!
கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் கல்விநிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
2 நாட்கள் முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு !!
இதுதொடர்பாக மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மாநில கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு தமிழக அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா பொது முடக்கம்நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்உயர்கல்வித் துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றன.
- கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் வீட்டில் இருந்தபடி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
- அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
- அனைத்து கல்வி பயிற்சி நிறுவனங்களும் அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்களும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை மட்டுமே நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.