ஓ.பி.சி.,(OBC)-க்கு 76 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்ய- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்..!!
தமிழகத்தில் தொழில் பழகுனர் தேர்வின் போது இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 76 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பதையும் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்’ என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:
சென்னை மணலியில் செயல்படும் சென்னை உர நிறுவனத்திற்கு 45 தொழில் பழகுனர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஓ.பி.சி. (OBC)மக்கள் தொகை 76 சதவீதம் என்பதால் அப்பிரிவினருக்கு 45 தொழில் பழகுனர் இடங்களில் 34 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 12 இடங்கள் அதாவது 27 சதவீத இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த சமூக அநீதியை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் தான் ஓ.பி.சி. (OBC)இட ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான ஓ.பி.சி. (OBC)ஒதுக்கீடு என்பது சமூக நீதியாக இருக்காது. அந்தந்த மாநிலங்களில் ஓ.பி.சி.(OBC) மக்கள் தொகைக்கு இணையாக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இந்த சட்டத்திற்கு எதிராக வகுக்கப்பட்ட தொழில் பழகுனர் விதிகள் செல்லாது என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
இந்த செய்தியையும் படிங்க…
‘விரைவில் நலம் பெறுங்கள் ராகுல்’- மோடி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!!
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் ‘டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.