CBSEயை தொடர்ந்து ICSE -10ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து..!!
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் ஒன்றியம் நடத்தும் ஐசிஎஸ்இ (ICSE)பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அரசு, தனியார் மற்றும் சிபிஎஸ்இ(CBSC) பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், 12ம் வகுப்பு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சிஐஎஸ்சிஇ(CISCE) எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் ஒன்றியம் நடத்தும் ஐசிஎஸ்இ (ICSE)10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ஐசிஎஸ்இ(ICSE) தலைமை நிர்வாக அதிகாரி அரதூன் நேற்று அறிவித்தார்.
இந்த செய்தியையும் படிங்க…
ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்..!!
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘நாட்டில் தற்போது நிலவி வரும் மோசமான கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சிஐசிஎஸ்இ(CICSE) 10ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் நியாயமான, நடுநிலையான நிலைமை கடைப்பிடிக்கப்படும். மதிப்பெண் மதிப்பீடு செய்வது, தேர்வு முடிவுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.