மத்திய கல்வி அமைச்சர்- ரமேஷ் போக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி..!!
மத்திய கல்வி அமைச்சர் ரமெஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை ரமேஷ் போக்ரியால் ட்விட்டர் செய்தி மூலம் உறுதிபடுத்தினார்.
கல்வி அமைச்சகத்தின் அனைத்து பணிகளும் வழக்கமான முறையில் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியையும் படிங்க…
TNPSC – தேர்வுகளின் விடைத்தாள் பெற புதிய வசதி..!!
அவரது உடல்நலம் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர், “இன்று எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். எனது மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான் மருந்துகளை எடுத்துக்கொண்டு சிகிச்சையில் உள்ளேன். சமீபத்தில் எனது தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதித்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் தடுப்பூசி செயல்முறை முழு முனைப்புடன் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தொற்றின் எண்ணிக்கையும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.