தடுப்பூசி போட்டுக்கொண்டபின்- வலிப்பு..!! - Tamil Crowd (Health Care)

தடுப்பூசி போட்டுக்கொண்டபின்- வலிப்பு..!!

 தடுப்பூசி போட்டுக்கொண்டபின்- வலிப்பு..!!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸைச் சேர்ந்த 18 வயதான எம்மா புர்கி, கடந்த 1-ம் தேதி ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றுக்கொண்டார்.

சுமார் ஒரு வாரம் கழித்து, எம்மாவுக்கு வலிப்பு ஏற்பட்டதால், அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க

10TH படித்தோருக்கு -தேர்தல் ஆணைய துறையில் வேலைவாய்ப்பு.!! 

பின்னர் எம்மா கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் வைக்கப்பட்டார், அவரது மூளையில் இரத்தக் கட்டிகளை சரிசெய்ய மூன்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.

தற்போது எம்மாவின் நிலைமையில் கொஞ்சம் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அவரது பெற்றோர், அவர் புன்னகைக்கவும், சில வார்த்தைகள் பேசவும், ஏதாவது கேட்டால், கண்களை சிமிட்டி பதிலளிக்கவும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மூளையில் இரத்தக்கட்டிகள் உருவான ஒன்பதாவது நபர் எம்மா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment