இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கரோனாவை -கோவாக்சின் திறம்பட எதிர்க்கும்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்..!! - Tamil Crowd (Health Care)

இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கரோனாவை -கோவாக்சின் திறம்பட எதிர்க்கும்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்..!!

 இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கரோனாவை -கோவாக்சின் திறம்பட எதிர்க்கும்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்..!!

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியானது, இரட்டை உருமாற்ற கரோனா வைரஸையும் திறம்பட எதிர்த்து போரிடும் என ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில்) ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐசிஎம்ஆர்-ன் கீழ் செயல்படும் தேசிய வைராலஜி நிறுவனமானது கரோனா வைரஸின் பிரிட்டன் வகை, பிரேசில் வகை, தென் ஆப்பிரிக்க வகை என பல்வேறு வகைகளை வெற்றிகரமாக தனிமைப்படுத்தி வளர்த்துள்ளது. பிரிட்டன் வகை கரோனா வைரஸை கொல்லும் ஆற்றல் கோவாக்சின் தடுப்பூசிக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க

10 – ஆம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு : பள்ளிக் கல்வித் துறை..!!

இந்தியாவின் சில பகுதிகளிலும் வேறு சில நாடுகளிலும் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கரோனா வைரஸையும் தேசிய வைராலஜி நிறுவனம் வெற்றிகரமாக தனிமைப்படுத்தி வளர்த்துள்ளது. இந்த வகை வைரஸையும் கோவாக்சின் திறம்பட எதிர்த்து போரிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் இரட்டை உருமாற்ற கரோனா வைரஸ் காணப்பட்டதை சுகாதார அமைச்சகம் கடந்த மார்ச் இறுதியில் ஒப்புக்கொண்டது. என்றாலும் இதன் பரவும் வேகம் இன்னும் உறுதி செய்யப் படவில்லை என ஐசிஎம்ஆர் தலைவர் பார்கவா கூறினார்.

Leave a Comment