உருக்கமாக பேசிவிட்டு கொரோனாவால் -உயிரிழந்த மருத்துவர்..!!
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர் உருக்கமாக பேசிய 19 மணி நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது உலகம். அதிலும் இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து சேவையாற்றி வருகின்றனர்.
இந்த செய்தியையும் படிங்க…
அந்த வகையில், மும்பையில் மனிஷா ஜாதவ் (57) என்ற பெண் மருத்துவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மும்பை சிவ்ரி காச நோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியான மனிஷா ஜாதவ் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் .
கொரோனா பாதித்த பிறகு, இவர் முகநூலில் வெளியிட்ட வீடியோவில், இதுதான் எனது கடைசி காலை . நான் இனி உங்களை இங்கே சந்திக்க மாட்டேன் . அனைவரும் உங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள் . உடலுக்குத்தான் மரணம் . ஆத்மாவுக்கு இல்லை என்று பேசியிருந்தார் .
வீடியோ வெளியிட்ட 19 மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மருத்துவ சங்கத்தின் தகவல்படி மகாராஷ்டிராவைச் சேர்ந்த 18,000 மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 168 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.