ஆசிரியர்கள் வருகை- ஏப்ரல் 30 வரை உறுதி செய்யப்படும்…!!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுப் பிரிவு மற்றும் தொழில் கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வு வரும் 23ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. செய்முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு முந்தைய நாள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
ஆசிரியர்களுக்கு- கொரோனா பரவுகிறது..!!
செய்முறை தேர்வில் பங்கேற்க மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 23ம் தேதிக்குப் பின் விடுமுறை அறிவிக்கப்படும் அதே நேரம் வரும் 30ஆம் தேதி வரை பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும். ஓட்டு எண்ணிக்கைக்கு பின் விடுமுறை குறித்த விவரம் தெரிவிக்கப்படும் .ஏப்ரல் 30 வரை ஆசிரியர்கள் வருகை உறுதி செய்யப்படும் என்றனர்.