இலவச, 'நீட்' பயிற்சியை மீண்டும் துவங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவு..!! - Tamil Crowd (Health Care)

இலவச, ‘நீட்’ பயிற்சியை மீண்டும் துவங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவு..!!

 இலவச, ‘நீட்’ பயிற்சியை மீண்டும் துவங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவு..!!

‘ நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மாநில அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், 7.5 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதனால், பல அரசு பள்ளி மாணவர்கள், எளிதாக மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த ஒதுக்கீட்டில் சேர உள்ள மாணவர் களுக்கு, இலவச நீட் பயிற்சி, அரசு சார்பில், ஆன்லைன் வழியாக வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 5,000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் இந்த பயிற்சியை மேற்கொண்டு உள்ளனர்.

இந்த செய்தியையும் படிங்க…

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட பயிற்சி கட்டகம், புத்தகம் தயார்; கல்வி தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப கல்வித்துறை உத்தரவு..!! 

பிளஸ் 2 தேர்வு மே, 5ல் நடக்க இருந்ததால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி, இரண்டு வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, பொது தேர்வு தேதி திடீரென தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால், வரும், 25ம் தேதி முதல், மீண்டும் இலவச நீட் பயிற்சியை துவங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment