(22-04-2021 ) – தங்கம் & வெள்ளி விலை நிலவரம்..!!
சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பின்னா், விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.
இந்த செய்தியையும் படிங்க….
உலக அளவில் பாதிப்பில் முதலிடம் தொட்ட இந்தியா.! – அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது.!
கடந்த 6-ஆம் தேதி முதல் தங்கத்தின் மீண்டும் விலை உயரத் தொடங்கி, 9-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. ஆனால் புதன்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.512 அதிகரித்து, ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது.
இதன்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.36,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.26 அதிகரித்து, ரூ.4,537 ஆக இருந்தது.
இதே போல், வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 அதிகரித்து, ரூ.75.700 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1600 அதிகரித்து ரூ.75,700 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்-4,537
1 சவரன் தங்கம்-36,296
1 கிராம் வெள்ளி-75.70
1 கிலோ வெள்ளி-75,700
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்- 4,511
1 சவரன் தங்கம்-36,088
1 கிராம் வெள்ளி-74.10
1 கிலோ வெள்ளி-74,100