கொரோனா தடுப்பூசி.. 18+ கவனத்திற்கு.. ஏப்.24 முதல்.. ஆன்லைனில் ‘ரெஜிஸ்டர்’ செய்வது எப்படி.??
கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், வரும் 24-ம் தேதி முதல் கோவின் இணைய தளம் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
உலக அளவில் பாதிப்பில் முதலிடம் தொட்ட இந்தியா.! – அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது.!
முதல் கட்டமாக சுகாதாரத்துறை மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், 2-வது கட்டமாக 60 வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
கொரோனா 2-வது அலை தாக்கம் காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வருகிற 1-ம் தேதி முதல் தடுப்பூசி போட மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக வருகிற ஏப்ரல் 24 முதல் கோவின் இணைய தளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
ஆசிரியர்கள் வருகை- ஏப்ரல் 30 வரை உறுதி செய்யப்படும்…!!
இதற்காக Cowin இணையதளத்தில் எப்படி ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்:
- cowin.gov.in தளத்தை Log on செய்து உங்கள் மொபைல் எண்ணை பதிவிடவும்
- உங்கள் மொபைலுக்கு OTP எண் அனுப்பப்படும்.
- அந்த OTP எண்ணை பதிவு செய்து ‘Verify’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- OTP எண் சரிபார்க்கப்பட்டு பிறகு, தடுப்பூசி ரெஜிஸ்டர் பக்கம் ஓபன் ஆகும்
- அதில் photo ID proof உட்பட கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.
- பிறகு, கீழ் வலதுபுறத்தில் உள்ள Register பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- Register முடிந்ததும், உங்களுக்கு கணக்கு விவரங்கள் காண்பிக்கப்படும். அந்த கணக்கு விவரங்கள் பக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நேரத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
- நீங்கள் இன்னும் சிலரை சேர்க்க விரும்பினால், கீழே வலது பக்கத்தில் Add More பட்டனை க்ளிக் செய்து அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும்.