பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது செய்முறை தேர்வு, இன்று முடிவு – மாணவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டாம்..!!
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது செய்முறை தேர்வு, இன்று முடிகிறது. மாணவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, மே, 5ல் பொதுத் தேர்வு நடப்பதாக இருந்தது. கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், இந்த தேர்வை அரசு தள்ளி வைத்துள்ளது.அதே நேரம், பொதுத் தேர்வுக்கு முந்தைய பொது செய்முறைத் தேர்வு திட்டமிட்ட படி, இந்த மாதம், 16ம் தேதி துவங்கியது.
இந்த செய்தியையும் படிங்க….
இலவச, ‘நீட்’ பயிற்சியை மீண்டும் துவங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவு..!! |
இந்த தேர்வு ஐந்து நாட்கள் நடத்தப்பட்டன. 7,000 பள்ளிகளைச் சேர்ந்த, இரண்டு லட்சம் மாணவ – மாணவியர் இதில்பங்கேற்றனர்.இந்த செய்முறைத் தேர்வு இன்றுடன் முடிகிறது. ‘இனி, மாணவ – மாணவியர் யாரும் பள்ளிகளுக்கு வர வேண்டாம். ‘ஹால் டிக்கெட்’ பெற்று, பொதுத் தேர்வுக்கு நேரடியாக வந்தால் போதும்.அதுவரை வீட்டில் இருந்தே தேர்வுக்கு தயாராக வேண்டும்’ என, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.